சிபிராஜ் படத்தில் வித்யாசாகர் மகன் இசையமைக்கிறார்!
Sibiraj, Sibi 20, Harsha Vardhan, Pandiyan Athimoolam, Vidyasagar 16-Feb-2022: “ஸ்டுடண்ட் நம்பர் 1” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகினார் சிபி சத்யராஜ். இவர் அதன் பின் அவரது தந்தை சத்யராஜுடன் சேர்ந்து ‘மண்ணின் மைந்தன்’ மற்றும் கோவை பிரதர்ஸ், ஜோர், வெற்றிவேல் சக்திவேல், போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபி நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜேக்சன் துரை, கட்டப்பாவ காணோம் மற்றும் சத்யா போன்ற பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கபடதாரி படம் மூலம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் நடிப்பில் தற்போது மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாவதற்காக இருக்கின்றன.
மேலும் அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரின் 20 வது படமாக இது உருவாகிவருகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ‘ஹர்ஷ வர்தன்’ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருடன் பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் இந்தப் படத்தை ஆர்வத்துடன் ஒத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தில் பணியாற்ற இருக்கும் பிற கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.