‘பத்து தல’ படத்துக்கு வந்த சோதனை! எல்லாம் சிம்புவால் வந்த வினை..

சிம்புவால் பத்து தல படத்துக்கு வந்த சோதனை!

Simbu, Silambarasan, Gautham Karthik, Pathu Thala 16-Feb-2022: மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படமான ‘பத்து தல’ படம் ஆரம்பிக்கப்பட்டு, பலகாலமாக இந்தப் படம் கொரோனா பிரச்சினையின் காரணமாக தடைபட்டு தற்போது தான் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்,மற்றும் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கூடிய விரைவில் இந்த படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு குழு படு மும்முரமாக வேலை பார்த்து வருகின்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பல மாதங்களுக்கு முன்பு படமாக்கப்பட்ட இந்த கதையில் ஆரம்பத்தில் நடிகர் சிம்பு குண்டாக பருத்த உருவத்தில் இருந்தார். அதன் பிறகு படப்பிடிப்பு நடக்காமல் பல மாதங்கள் இப்படம் முடங்கி இருந்த கால இடை வேளையில் சிம்பு தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி மெலிந்து அட்டகாசமான புதிய தோற்றத்தில் மாறியுள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

தற்போது இந்த சிம்புவின் உடல் மாற்றம் தான் பத்துதலை படக்குழுவிற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அதாவது சிம்பு குண்டாக இருந்த போது எடுக்கப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு குழம்பிப்போய் இருக்கிறது.

இதே போன்ற ஒரு சிக்கலான நிலையை தான் மாநாடு படத்திலும் இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார். ஆனால் அவர் சிம்புவின் குண்டாக இருந்த தோற்றத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து மாற்றி அமைத்து படத்தை ரிலீஸ் செய்தார். இந்நிலையில் பத்து தல படத்தின் தயாரிப்பு நிர்வாகம் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.