விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! தகவல் வெளியீடு!

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!

Vijay Sethupathy, Ponram, Anukreethy Vas, VJS 46 16-Feb-2022: பொன்ராம் இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ”விஜேஎஸ்46” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது அசத்தலான ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிறது மட்டுமின்றி இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்பகுதி மற்றும் செல்ங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.