“எதற்கும் துணிந்தவன்” படத்தின் டீஸர் வெளியீட்டின் தேதி அறிவிப்பு!

எதற்கும் துணிந்தவன் டீஸர் வெளியீடு தகவல்!

Pandiraj, Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Sathyaraj 16-Feb-2022: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருப்பதுடன், மற்றும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் டீசர் தேதியை இயக்குனர் பாண்டிராஜ் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.