21 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது
Anirudh , Beast, Nelson , Pooja Hegde, Sivakarthikeyan, Vijay, Arabic Kuthu 15-Feb-2022 : விஜய்யின் கடந்த வருட படமான மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். விஜய் அடுத்து கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனரான நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அவருடன் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பீஸ்ட் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இந்த படத்தின் பாடலின் நடனம் மற்றொரு லெவலில் இருக்கும் என்று கூறினார். எதிர்வரும் தமிழ் புத்தாண்டன்று விஜய் நடித்த பீஸ்ட் வெளிவர இருக்கிறது.
இப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடவுள்ளது. இந்நிலையில் தற்போது பீஸ்ட்டின் முதல்ப் பாடலான அரபிக் குத்து காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகியது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இதை பாடகி ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். தற்போது இப் பாடல் தற்போது 2 கோடியே 30 லட்சம் பார்வைகளை கடந்து யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்திலுள்ளது . இது 21 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.