‘கோப்ரா’ படத்தின் 4 வருட உழைப்பு.. படக்குழுவின் புதிய பிரமாண்டமான வெளியீடு!

கோப்ரா படக்குழுவினர் 4 வருட உழைப்பின் கொண்டாட்டம்!

Vikram, R. Ajay Gnanamuthu, AR Rahuman, Srinidhi Shetty, Irfan Pathan, Miya, S. S. Lalit Kumar, Cobra 15-Feb-2022: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’ மற்றும், கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார் என்பதும் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், மற்றும் குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைகிறார், மற்றும் இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 23 முதல் துவங்கி நடைபெற்று வருவதாக அஜய் ஞானமுத்து ஏற்கனவே அறிவித்தார். பின்னர் திடிரென நடிகர் விக்ரமுக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் மறுபடியும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே {ஜனவரி -5,2022} படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோப்ரா படத்தினுடைய அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் (14.02.2022) நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக படக்குழு கேக்வெட்டி விமர்சையாக கொண்டாடி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 4 வருட காலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.