சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான்.. அகப்படுவார்களா சிவாவின் வலையில் பெருந்தலைகள்!

சிவகார்த்திகேயனின் சுமையை இறக்க அகப்படுவார்களா பெருந்தலைகள்

Sivakarthikeyan, Anudeep, SK 20 15-Feb-2022: விஜய் டிவி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழில் மட்டும் அல்லாது தற்போது தெலுங்கு சினிமாவிலும் தன் முத்திரையைப் பதிக்க தயாராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுதீப் இயக்கும் ‘எஸ் கே 20’ திரைப்படத்தை ஆந்திராவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ‘ஏசியன் சினிமாஸ்’ தயாரிக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தினர் ஆந்திராவில் பெரிய அந்தஸ்து கொண்டவர்கள். தற்போது இவர்கள் கையில் கிட்டத்தட்ட 11 படங்கள் இருக்கின்றது.

மேலும் இவர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு எல்லாம் பைனான்ஸ் பண்ணியவர்கள். இது தவிர இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஆந்திர பிரபலம் ராம நாயுடுவின் வாரிசுகள் இருக்கின்றனர். அதனால்தான் சிவகார்த்திகேயன் பக்காவாக பிளான் பண்ணி இந்த படத்தை செலக்ட் பண்ணி இருக்கிறார் என்பது தெரிகிறது.

இதற்கு வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது என்பது தெரிய வருகிறது, அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் தற்போது ‘டாக்டர்’ படத்தின் பைனான்சியரால் அதிக கடன் சுமையில் சிக்கி தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத்தான் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அவர் அந்தப் படங்களை ஏற்பதற்கு முன்னர் தயாரிப்பாளர்களை பற்றி நன்கு விசாரித்து விட்டு பெரிய தலைகளாக இருந்தால் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு இருக்கும் கடன் சுமை முழுவதுமாக தீரும் என மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது.