அஜித் படத்தின் புதிய அப்டேட்!
Ajith kumar, Thala, H Vinoth, Boney Kapoor 15-Feb-2022: நீண்டகால இடைவெளியுடன் அஜித்தின் படம் வெளி வராத சூழ்நிலையில் தற்போது வலிமை படத்திற்கு நாள் குறித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி வலிமை படம் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனை அடுத்து மீண்டும் வினோத்துடன் இணைந்து மற்றும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பிரம்மாண்ட செட் தற்போது தயாராகி வருகின்றது.

தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளி வந்தாலே அன்று முழுக்க ட்ரெண்டிங்கில் இருக்கும் அதேபோல் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கிவருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் வெள்ளைத்தாடி, கடுக்கன் மற்றும் கண்ணாடியுடன் செம கெத்தாக ஜொலிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அடுத்த படத்தின் நியூ லுக் போல உள்ளது, அது மட்டுமில்லாமல் இதில் ஆளே அடையாளம் தெரியாமல் ஹாலிவுட் ஹீரோ போல் மாறி உள்ளார் அஜித்.