‘ராதே ஷ்யாம்’ கிளிம்ப்ஸ் வெளியானது

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ்

Radhe Shyam, Prabhas, Pooja Hegde, Radha Krishna Kumar 14-Feb-2022 : T-சீரிஸ் மற்றும் UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’ மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது. இயக்குநரும் எழுத்தாளருமான ராதா கிருஷ்ண குமாரின் இரண்டாவது படம் ‘ராதே ஷ்யாம்’.அவரது முதல் படம் ஜில்லில் கோபிசந்த், ராஷி கண்ணா, கபீர் துஹான் சிங் மற்றும் பலர் நடித்திருந்தனர். UV கிரியேஷன்ஸ்ஸே அவரது இரண்டு படங்களையும் தயாரித்தது.

‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, கிருஷ்ணம் ராஜு, சத்யராஜ், ஜெகபதி பாபு, சச்சின் கெடேகர், பிரியதர்ஷி புலிகொண்டா, முரளி ஷர்மா, குணால் ராய் கபூர், ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

பின்னணி இசை எஸ்.தமன் (தெலுங்கு  சஞ்சித் பல்ஹாரா (இந்தி). பாடல்கள் ஜஸ்டின் பிரபாகரன் (தெலுங்கு ) மனன் பரத்வாஜ் (இந்தி ), மித்தூன் (ஹிந்தி ), அமல் மல்லிக் (ஹிந்தி ). ஜனவரி 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்ட படம், கொரோனா கட்டுப்பாடு காரணமாக பிற்போடப்பட்டன. இந்நிலையில் இப் படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியான கிளிம்ப்ஸ் இணையத்தில் வைரலாகிறது.