‘க்ரிதி ஷெட்டி’ விசில் மஹாலட்சுமியாக கலக்கும் புதிய வெளியீடு!

விசில் மஹாலட்சுமியாக கலக்கும் கீர்த்தி ஷெட்டி!

Ram Pothineni, Krithi Shetty, Lingusamy, The Warrior 14-Feb-2022: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் க்ரிதி ஷெட்டியின் போஸ்டர் தற்போது காதலர் தினத்தை ஒட்டி இன்று வெளியாகியுள்ளது.

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், க்ரிதி ஷெட்டியின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் க்ரிதி ஷெட்டி, சர்ட் மற்றும் ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருப்பதுபோல் கீழே க்ரிதி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலட்சுமி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ‘ஸ்ரீநிவாசா சித்தூரி’ பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வெற்றிபெற்ற ‘சீடிமார்’ படத்தினை தயாரித்த இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக “தி வாரியர்” உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் வில்லனாக ஆதி பினிஷெட்டி இதுவரை பார்த்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அக்‌ஷரா கௌடா மிக சுவாரஸ்யமான, முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.