மீண்டும் தொடங்கின ‘நானே வருவேன்’ படத்தின் பணிகள்
Selvaraghavan , Dhanush, Naane Varuven, Yuvan Shankar Raja 14-Feb-2022 : பிரபல இயக்குனர் செல்வராகவன் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர். ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘என்ஜிகே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகியவை இவரது படங்கள். அவர் தனது சகோதரர் நடிகர் தனுஷுடன் இணைந்த பணியாற்றிய படங்களாவன ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் மீண்டும் உருவாகும் புதிய படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த கூட்டணியின் படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தது.
தற்போது ‘நானே வருவேன்’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதனை தயாரிப்பாளர் எஸ். தாணு அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘அசுரன்’, ‘கர்ணன்’ வரிசையில் ‘நானே வருவேன்’, நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்… தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில். எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அசுரன், கர்ணன் வரிசையில் #NaaneVaruven நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்…@dhanushkraja நடிப்பில் @selvaraghavan இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்..@thisisysr @omdop @dhilipaction pic.twitter.com/RK75mncYb3
— Kalaippuli S Thanu (@theVcreations) February 14, 2022