அமீர்,வெற்றிமாறன் கூட்டணியின் புதிய படம்

அமீரின் புதிய படத்தின் பெயர் வெளியானது

Ameer, Vetrimaaran, Yuvan Shankar Raja, Iraivan Miga Periyavan 14/02/2022 : வெற்றி இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனரான அமீர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் தன் பக்கம் திரும்ப வைத்தார். அதை தொடர்ந்து ஜீவாவின் ராம், கார்த்தியின் பருத்திவீரன், ஜெயம் ரவியின் ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

Iraivan Miga Periyavan 14th Feb 2022

இவர் சுப்பிரமணியன் சிவாவின் இயக்கத்தில் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பரிமாணம் எடுத்தார். நீண்ட காலத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் தனுஷ்,கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோரோடு நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இப்புதிய படத்திற்கு ‘இறைவன் மிக பெரியவன்’ என தலைப்பிடப் பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து கதை எழுதும் இப்படத்தை இயக்குனர் அமீர் ஒன்பது வருடங்களின் பின் இயக்கவுள்ளார். இந்நிலையில் இதன் டைட்டில் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அத்துடன் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மும்மதச்சின்னங்களும் அடையாளப் படுத்த பட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.