பிரபல நடிகர் ஒருவருக்கு வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி!

மீண்டும் வில்லனாக பிரபல நடிகரின் படத்தில் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi, Karthi, Raju Murugan 14-Feb-2022: ‘பேட்ட’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக களம் இறங்கிய விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக களமிறங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பின்பு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, சூதுகவ்வும், நானும் ரவுடி தான், தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்து சினிமாத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்திருந்தார். கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் பொழுது அவ்வப்போது பெரிய நடிகர்களுக்கு வில்லனாகவும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வாரி குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினி, விஜய் என பல நடிகர்களுக்கு வில்லன் கதாப்பாத்திரத்தில் தோன்றி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கவிருக்கும் படத்திற்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தாமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதற்குமுன் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் கார்த்தியின் நண்பனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்திக்கு வில்லனாக எதிர் பார்க்கப்படும் பொது வெறித்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.