இயக்குனர் வெற்றிமாறன் வாங்கிய உலகின் அதி விலையுயர்ந்த பிரபல பைக்!

அதி விலை உயர்ந்த பைக் வாங்கிய வெற்றிமாறன்!

Vetrimaaran, Viduthalai, BMW Bike 14-Feb-2022: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கும் வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ப்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பட இயக்குனராக சினிமா துறையில் தன்னை நிலை நாட்டியவர் ஆவர். தயாரிப்பாளராகவும் காக்கா முட்டை, உதயம் NH4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 5 முறை தேசியவிருதை பெற்றிருக்கிறார்.

இதை தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். விடுதலைக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெற்றிமாறன், தனது அடுத்த படமான வாடிவாசலில் படத்தை இயக்கவுள்ளார். எழுத்தாளர் “சி சு செல்லப்பா” அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கிய “அசுரன்” மற்றும் “விசாரணை” படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் “விடுதலை” படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் புதிய BMW R NineT Scrambler பைக்கை வாங்கியுள்ளார். KUN BMW Motorrad நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை 19 லட்சம் ஆகும். 17 லிட்டர் பெட்ரோல் அளவு கோண்ட பெட்ரோல் டேங்க் உடன், 1170 சிசி இஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்ஸ் மூலம் இஞ்சின் காற்றின் மூலம் குளிர்விக்க கூடிய வசதியை கொண்டுள்ளது.

இதன் எடை 223 கிலோ கொண்டதாகவும் இந்த பைக் 3.5 செக்கன்களில் 100 கிலோ மீட்டரை எட்டும். 3 வருட வாரண்டி உடைய, இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிலோ மீற்றார் ஆகும்.