ஒரே நாளில் சாதனை படைத்த காத்துவாக்குல 2 காதல் டீசர்

Kaathuvaakula Rendu Kaadhal Teaser

Kaathuvaakula Rendu Kaadhal 13 Feb 20222 : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் “காத்துவாக்குல 2 காதல்”. இந்த படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஒரே நாளில் இந்த டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து காத்துவாக்குல 2 காதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.