வலிமை படத்திற்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு வலிமை படம் ரிலீசாவதற்கு முன் அறிவிப்பு விடுத்துள்ளது!

Valimai, Ajith, H. Vinoth, Yuvan Shankar Raja 12-Feb-2022: கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதி குறைக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

கொரோனா 2ஆம் அலைப் பரவலால் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் தமிழக அரசு 2021 ஆகஸ்ட் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. பின்னர் இது 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் 1 முதல் இன்று வரை தமிழக திரையரங்குகளில் 50 சதவீத ஆசனங்களுக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோணா பாதிப்புக்கள் கட்டுக்குள் இருப்பதால் தற்போது தமிழக அரசு திரையரங்குகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத பார்வையாளர்களுக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி அளித்துள்ளது. அதே போல் உணவகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று வலிமை படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல், தீபாவளி காலங்களில் தமிழ் நாட்டில் சினிமா டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் குறைந்தபட்சம் வசூல் ஆகும். இது ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கே இதுவரை நடந்துள்ளது. பெரிய படங்கள் வராததால் தமிழக சினிமா தியேட்டர்கள் நலிவடைந்துள்ளன. தற்போதைய 100 சதவீத பார்வையாளர் அனுமதி திரையரங்க உரிமையாளர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.