சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘SK 20’ இல் வெளிநாட்டு நடிகை!

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போடும் வெளிநாட்டு நடிகை!

Sivakarthikeyan, SK 20, Don, Doctor, Olivia morris, Anudeep 12-Feb-2022: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார் என்பது அறிந்ததே. முன்பு சிவகார்த்திகேயன் நடித்து வெளியான “டாக்டர்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறிருக்க மார்ச் 25, 2022 அன்று ‘டான்’ படம் ரிலீசாக இருக்கிறது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வீறுநடை போட்ட நகைச்சுவை திரைப்படமான ‘ஜதி ரத்னலு’ பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கும் SK20 படத்தில் இணைகிறார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, சுரேஷ் புரொடெக்சன் இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இடை வேளையின் பின் சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்பது தொடக்க விழாவில் தெளிவாகி விட்டது. மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் கடந்த 10.02.2022 முதல் துவங்கி உள்ளது என்பது அறிந்ததே. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இங்கிலாந்து நடிகை ‘ஒலிவியா மோரிஸ்’ நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே RRR படத்தில் ஜெனிபர் பாத்திரத்தில் நடித்தவர் ஆவர். மேலும் இந்த படத்தில் கேமரா மேனாக மனோஜ் பரமஹம்சா பணிபுரிய உள்ளார். இவர் ஏற்கனவே நண்பன், ராதே ஷ்யாம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை ஒளிப்பதிவு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.