ஜெயம் ரவியின் JR 28 விபரம் வெளியானது
Jayam Ravi, Agilan, Tanya Ravichandran, Priya BhavaniShankar 12-Feb-2022 : ஜனவரி 2021ல் வெளியான பூமி படத்திற்கு பின் ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ‘பூலோகம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் மீண்டும் ஆறு வருடங்களின் பின் ஜெயம் ரவியின் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்திற்கு ‘JR 28 ‘ என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இப்படத்தின் பெயர் ‘அகிலன்’ என்று வைக்கப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படம் ஆக்சன் திரில்லராக உருவாகின்றது. இத்திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் தோன்றுவதாக கூறப்படுகிறது.
இவருடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். அகிலன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Agilan makes his entry! Happy to unveil the first look of #JR28@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @harishuthaman @janichirajani @onlynikil @CtcMediaboy pic.twitter.com/fAOHtbTbEQ
— Jayam Ravi (@actor_jayamravi) February 12, 2022