‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டீஸர் வெளியீடு

விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’

Kaathuvaakula Rendu Kaadhal, Vignesh Shivan, Nayanthara, Vijay Sethupathi, Samantha 12-Feb-2022 : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதியுடன் சமந்தா ரூத் பிரபு, நயன்தாரா, எஸ்.ஸ்ரீசாந்த், கலா, பிரபு, லொள்ளு சபா மாறன் மற்றும் ரெடிங் கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் வழமையான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஏ. ஸ்ரீகர் பிரசாத். விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் மட்டும் வெளியாகும் என்றும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.