தீபிகா படுகோனுக்கு முத்தமழையில் பாராட்டு தெரிவித்த ரன்வீர் சிங்! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்

தீபிகா படுகோனுக்கு முத்தம் கொடுத்து பாராட்டு தெரிவித்த ரன்வீர் சிங்!

Shakun batra, Deepika padukone, Ananya panday, Gehraiyaan, ranveer singh 12-Feb-2022: கபூர் & சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ரா தனது அடுத்த படம் பற்றி அறிவித்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பினார். குறிப்பாக தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்க, கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு “கெஹ்ரையன்” என பெயரிடப்பட்டது.

‘கெஹ்ரையன்’ படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. அந்தநிலையில் நேற்று பிப்ரவரி 11 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படம் திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு ஓடிடி வழியைத் தேர்வுசெய்து, நேராக ‘அமேசான் பிரைமில்’ ரிலீசானது. இந்த படத்துக்கு சென்சார் போர்டால் “A” சான்றிதழ் கொடுக்கப்பட்டது. 25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

‘கெஹ்ரையன்’ படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பித்தக்கது. இந்த பட டீசரில் தீபீகா படுகோன் 9 வருடங்களுகு பிறகு பிகினியில் வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் டிரெய்லரில் பல முத்தக்காட்சிகளும், குளியலறை, படுக்கை காட்சிகளும் இடம் பெற்றிருந்து பரபரப்பை கிளப்பியது. நவீன உறவுச்சிக்கலை இந்த படம் பேசி உள்ளதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங் பாராட்டி உள்ளார்.

தீபிகா படுகோனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “டூபே…ஹான் டூபே… ஏக் டூஜே மெய்ன் யஹான்… Tour De Force ஆழமான, உன்னதமான ஒரு செயல்திறன் என்ன ஒரு முழுமையான மாஸ்டர் கிளாஸ், பேபி! அவ்வளவு நேர்த்தியான, நுணுக்கமான மற்றும் இதயப்பூர்வமான கலைத்திறன்! … முழுநிறைவுடன் ஒப்பற்றளவில் சிறந்தது! நீ என்னை மிகவும் பெருமைப்படுத்திவிட்டாய்!” என ரன்வீர் சிங் கெஹ்ரையன் படத்தையும், தீபிகா படுகோனையும் பாராட்டி உள்ளார்.