90-ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோ ”சக்திமான்” திரைப்படமாகிறது | வைரலாகும் பாரதி கண்ணம்மா ரோஷினியின் நடன வீடியோ

90-ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோ ”சக்திமான்” திரைப்படமாகிறது

Shaktimaan 12 Feb 2022 : 90-களின் காலக்கட்டத்தில் மெஹா ஹிட் தொடராக அமைந்த தொடர் “சக்திமான்”. பல குழந்தைகளை கவர்ந்த இந்த தொடர் 1997-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்தத் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயம் சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல முன்னணி தொடர்களை முந்தி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அந்த அளவிற்கு இத்தொடர் பல ரசிகர்களை இன்றும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் தற்போது சக்திமான் தொடர் திரைப்படமாக தயாராக இருக்கிறது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இந்திய முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பல அபிமான தொடர்கள் திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் முகேஷ் கண்ணாவின் சக்திமான் தொடர், தற்போது படமாக உருவாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

வைரலாகும் பாரதி கண்ணம்மா ரோஷினியின் நடன வீடியோ

Roshini Haripriyan, Bharathi Kannamma 12 Feb 2022 : இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிப்பின், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாக்கனுப்பற்றி வருகிறார் ரோஷினி.

இந்நிலையில், நடிகை ரோஷினி நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.