“நரகமே காலியா இருக்கு” சாத்தானாக மிரட்டும் விக்ராந்த் புதிய அவதாரம்! மிரளவைக்கும் டீஸர்

“காமன் மேன்” படத்தில் விக்ராந்த் மிரட்டும் டீஸர் !

Vikranth, Sasikumar, common man 11-Feb-2022: ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார் என்பது அறிந்ததே. தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனரான சசிகுமார், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல அந்தஸ்தை பெற்றவர். முன்னர் வெளியாகிய சத்யராஜ் உடன் இணைந்து நடித்த ‘எம்ஜிஆர் மகன்’ மற்றும் ‘ராஜவம்சம்’ உள்ளிட்ட படங்கள் கடந்த நவம்பரில் ரிலீசானது.

சசிகுமார் படங்கள் என்றாலே கிராமம், முறுக்கு மீசை, தொடை தெரியும் வேட்டி கட்டு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்நிலையில், இயக்குநர் சத்யசிவா இயக்கும் “காமன் மேன்” படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். கழுகு, கழுகு 2 ஆகிய படங்களை சத்யசிவா இயக்கியுள்ளார். “காமன் மேன்” படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். இவர்களுடன் விக்ராந்த், மதுசூதனன், துளசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தையும் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன், த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இந்த டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படத்தில் சசிகுமார் சினிமா சவுண்ட் இன்ஜினியராக வருவது போன்று காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி மிரட்டலான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் விக்ராந்த் சசிகுமாருடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படமாக அமைந்திருக்கிறது. விக்ராந்த் கையில் கத்தியுடன் நடந்து செல்லும் அவர் ஒருவரை கொலை செய்வது போன்றும், பின்னணி குரலில் “நரகமே காலியா இருக்கு… சாத்தான் இங்கே இருக்கான்டா” என்பதோடு முடிகிறது இந்த வீடியோ. தற்போது இணையத்தில் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.