“நெஞ்சுக்கு நீதி” டீஸர் வெளியீடு

உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி”

கனா திரைப்படம் மூலம் அறிமுக இயக்குனரான அருண் ராஜா காமராஜ்ஜின் அடுத்த படம் “நெஞ்சுக்கு நீதி” ஆகும். இது ஹிந்தியில் ஆயுஷ்மான் க்ஹுரான நடித்த சூப்பர்ஹிட் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் பார்வையாளர்களை மிரட்டும் விதமாகவும் அமைந்துள்ளது.

ஆர்டிகள்15 படம் தாழ்ந்த ஜாதி மக்களின் கஷ்டங்களை கூறும்படியாக அமைந்து இருந்தது. தற்பொழுது தமிழில் வெளியாகவிருக்கும் இந்த நெஞ்சுக்கு நீதி படம் மூலம் உதயநிதி ஒரு திருப்புமுனையாக அமையப் போகிறது என்று எதிர்பார்க்கப் படுகிறது. டீசரில் “ஒருத்தன் நல்லவனா இருக்கிறதும், கெட்டவனா இருக்கிறதும் சாதியால இல்ல சார் அவனுக்குள்ள இருக்கிற குணத்துலதான் சார் இருக்கு…” என்று கண்ணீரோடு கூறும் வசனம் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா, நிமிர், மனிதன், சைக்கோ பட வரிசையில் இப்படமும் ஹிட் கொடுக்கும் எனத் தோன்றுகிறது. அரசியலில் உள்ள அவருக்கு இது மேலும் பலம் சேர்க்கும். இதில் நீதிக்காக போராடும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையிலும் தாழ்ந்த மக்களின் கஷடங்களைப் போக்குவார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.