திரைக்கு வந்த பிரபலம் ஒருவரின் மிரட்டலான படம் பார்த்து வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

அசத்தலான பட இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவித்த ரஜனிகாந்த்!

Rajinikanth, vikram, dhruv vikram, karthik subbaraj, mahaan 11-Feb-2022: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் பிரபல நடிகரின் படத்தை பாராட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “மகான்”. துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரித்துள்ளதென்பதும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படம் நேற்றைய தினம் (பிப்ரவரி 10-ஆம் தேதி) மூன்று மொழிகளில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. பலரின் கவனத்தை ஈர்த்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகான் படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இதனை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், சிறந்த படம் என்பதை மட்டும் அல்லாது சிறந்த நடிப்பும் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பும் அவருக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது என தலைவர் என்னை போனில் அழைத்து பாராட்டினார் என்று கூறியுள்ளார். உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா…! உங்களின் பாராட்டால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்த்ளத்தில் வைரலாக பரவி வருகின்றது.