ஜேம்ஸ் திரைப்பட டீஸர் வெளியாகியது

புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ்

Puneeth Rajkumar, James, Chethan Kumar 11/02/2022 : கன்னட சினிமாவில் பவர் ஸ்டாராக வலம் வந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் புனித் ராஜ்குமார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் இறுதியாக இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற படத்தில் நடித்து வந்த போது அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

அண்மையில் ஜேம்ஸ் படத்தின் போஸ்டரை இந்திய சுதந்திர தினத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதில் அவர் ஒரு இராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது அமரர் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்பட டீஸர் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது அவரின் ரசிகர்களால் பார்க்கப்பட்டும் பாராட்டப்படும் வருகிறது.