தனுஷ் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்த “நானே வருவேன்” படத்தின் புதிய போஸ்டர்!

“நானே வருவேன்” படத்தின் கலக்கலான போஸ்டர் வெளியீடு!

Dhanush, Naanee varuven, Yuvan Shankar Raja, Indhuja, Selva Raghavan 11-Feb-2022: தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்து “நானே வருவேன்” படத்தின் புதிய போஸ்டர் செம கேப்சனுடன் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு “நானே வருவேன்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தில் மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுதவிர இன்று இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதை காணக்கூடியவாறு உள்ளது.

கீழ் காணப்படும் போஸ்டர் மூலம் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிய முடிகிறது. போஸ்டரில் DUO: An Epic Journey என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் தனுஷ் இருப்பது போல் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. மேலும் தாடி மீடையுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு தனுசும், தாடி இல்லாமல் ஒரு தனுசும் போஸ்டரில் காணக்கூடியவாறு இருக்கின்றது.

இதை தொடர்ந்து தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘வாத்தி’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு இயக்குனர் ‘வெங்கி அட்லூரி’ இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்று பெயரிடப்பட்டும், தெலுங்கில் சார் (Sir) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாவதை தவிர்த்து நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ அறிவித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.