“போதைய விட்டு வாலே” பாடல் வெளியானது

அருண் விஜயின் யானை பாடல்

Yaanai, Arun Vijay, G.V.Prakash Kumar, Hari 11-Feb-2022 : நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. கிராமப்புறக் கதையை மையமாக வைத்து ஆக்சன் படமாக யானை உருவாகிறது. ஹரி விக்ரமின் சாமி Square இற்கு பின் இயக்கம் இப்படம் அதிக எதிர்பாப்புடன் தயாராகிறது.

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதற்குமுன் இந்த ஜோடி மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராமச்சந்திர ராஜூ,சமுத்திரக்கனி , ராதிகா, தலைவாசல் விஜய், யோகிபாபு ஆகியோர் யானை படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த பாடலான “போதைய விட்டு வாலே” பாடல் தற்போது வெளியாகியுள்ளது.