மன்மதலீலையில் அசோக் செல்வன் முத்த மழை

வெங்கட் பிரபுவின் வேற லெவல் மன்மதலீலை

Manmatha Leelai, Venkat Prabhu, Samyuktha Hegde, Ashok Selvan 11-Feb-2022 : மாநாடு வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் மன்மதலீலை. கடந்த மாதம் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதில் சூதுகவ்வும் படம் மூலம் அறிமுகமாகிய அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தெகிடி, 144,கூட்டத்தில் ஒருவன், சவாலே சமாளி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

இதில் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தை தொடர்ந்து இதற்கும் பிரேம்ஜி அமரனே இசையமைக்கிறார். இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த மாதம் மன்மதலீலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியது. இப்போது இப்படத்தின் சிறிய கிளிம்ஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அசோக் செல்வன் கதாநாயகிகளுக்கு முத்த மழையை பொழிகிறார். இந்த கிளிம்ஸில் இடம் பெற்றுள்ள காட்சி வேற லெவல் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய் கின்றனர்.