ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் விஷ்ணு விஷால்
Vishnu Vishal, FIR, Reba Monica John, Manjima Mohan 11-Feb-2022 : ‘எஃப்ஐஆர்’ படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். மனு ஆனந்த் முன்பு கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இப்படத்தில் விஸ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன் , ரெபா மோனிகா ஜான் , மாலா பார்வதி டி., மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், மேலும் பலர் நடித்துள்ளார்.
‘எஃப்ஐஆர்’ படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் அஸ்வத் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் பகவதி பிகே படத்தில் இரண்டு பாடல்களை எழுதினார். தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக, படக்குழு இதை OTT இல் வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது தளர்வு காரணமாக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் சொந்த தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் இன்று ‘எஃப்ஐஆர்’ வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தை மலேசியா, குவைத், கட்டார் ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் தன்னுடைய சமூக வலைத் தளத்தில் மலேசியா, குவைத் மற்றும் கட்டார் நாடுகளில் உள்ள தன் ரசிகர்களிடம் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
???
— IRFAN AHMED (ABA) (@TheVishnuVishal) February 10, 2022
Sorry #MALAYSIA and #KUWAIT audience… https://t.co/mUDZA3mJK4