நடன இயக்குனர் இயக்கும் துல்கர் சல்மானின் படத்திற்காக படக்குழுவை வாழ்த்திய பிரபல பாலிவுட் நடிகர்!

துல்கர் சல்மான் படத்துக்காக படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகர்!

Dhulkar salman, madhan karky, govind vasantha, brinda master 10-Feb-2022: திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது திரைப்பட இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். இவர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ’ஹே சினாமிகா’ என்ற படத்தை இயக்கிவருகின்றார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அச்சமில்லை அச்சமில்லை பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று மாலை 6 மணியளவில் ’ஹே சினாமிகா’ படத்திலிருந்து ’மேகம்” என்ற பாடலை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் ‘ஹே சினாமிகா’ படம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், பிருந்தா உட்பட படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.