புஷ்பா மேக்கிங் வீடியோ

அல்லு அர்ஜூன் புஷ்பாவாக உருவாகும் வீடியோ

Allu Arjun, Pushpa, Sukumar 10-Feb-2022 : புஷ்பா திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியானது. தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிப்பிலும் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்திலும் வெளியான புஷ்பா திரைப்படம் பாடல், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இத் திரைப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாஹத் பாசில், சுனில்,ஜெகதீஷ் பிரதாப், ராவ் ரமேஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவ ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இப்பட பாடல்களும் எல்லா மொழிகளிலும் பிரபலம்.

ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது இதில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் புஷ்பாவாக மேக்கப் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்படுகிறது. இதை அவரே வெளியிட்டுள்ளார்.