வைரலாகும் வெந்து தணிந்தது காடு புகைப் படம்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு

Vendhu Thanindhathu Kaadu, Silambarasan, Siddhi Idnani 10-Feb-2022 : சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா கல்யாணி பிரியதர்ஷன் நடித்த வெங்கட் பிரபுவின் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு சிலம்பரசன் நடிக்கும் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது. மற்றொரு காரணம் சிலம்பரசன் சூப்பர் ஹிட் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். அவர்களின் முந்தைய படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா (2010), அச்சம் என்பது மடமையடா (2016) பெரும் வெற்றி பெற்றது.

சிம்புவின் புதிய படமான வெந்து தணிந்தது காடு படத்தில் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக் பாபு, நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு புகைப் படமொன்றை சிம்பு தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Vendhu Thanindhathu Kaadu Photo