விக்ரம் எப்பவுமே வித்தியாசமானவர்

திவ்யதர்ஷினி புகழ்ந்த விக்ரம்

Dhivyadharshini, Mahaan, Chiyaan Vikram 10-Feb-2022 : பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் திவ்யதர்ஷினி(DD). இவர் அனுஹாசன் தொகுத்து வழங்கிய ‘ Koffee with Anu’ நிகழ்ச்சியின் பின்பு ‘Koffee with DD’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் டிடியாகாவே மாறிவிட்டார். அதன் பின் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கொரோனா காலத்திலிருந்து டிடி தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களால் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை.

Vikram is always different

இதனையடுத்து சமீபத்தில் RRR படத்தின் புரொமோநிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் செமயாக வரவேற்பானது. அதைப்போல அண்மையில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பிலும் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்திலும் உருவான மகான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் விக்ரம், துருவ், பாபி சிம்ஹா,கார்த்திக் சுப்ராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் பேட்டி எடுத்த பின்பு டிடி, விக்ரமிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே, அவர் தொகுப்பாளினி டிடி உடைக்கு ஏற்றவாறு ஷேர்ட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த நிகழ்வை டிடி தனது சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து இவர் தான் விக்ரம் என அவரை புகழ்ந்து பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.