விரைவில் பிரேம்ஜி திருமணம்
Vinaita Sivakumar, Premgi Amaren 10-Feb-2022 : இசையமைப்பார், திரைப்படத் தயாரிப்பாளர்,பாடகர், இயக்குனர்,பாடலாசிரியர் என பல துறைகளிலுமுள்ள கங்கை அமரனின் இளைய மகனும், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அண்மையில் வெளிவந்த ‘மாநாடு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர், தற்போது அசோக் செல்வன் நடிக்கும் வெங்கட் பிரபுவின் அடுத்த படமான ‘மன்மத லீலை’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திற்கும் இசை இவரே.
இதற்கிடையில் பிரபல பாடகி வினைதாவுடன் பிரேம்ஜி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வினைதாவே வெளியிட்டார் . “நான் இருட்டில் உன்னுடன் என் கைகளுக்கு இடையில் நடனமாடுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதியுள்ளார். இருப்பினும் இரு பிரபலங்களும் இது குறித்து இதுவரை வாய் எதுவும் திறக்கவில்லை.
