“போதைய விட்டு வாலே” பாடல் 11ம் திகதி வெளியீடு

யானையின் இரண்டாவது பாடல் 11ம் திகதி வெளியீடு

Yaanai, Arun Vijay, G.V.Prakash Kumar 09-Feb-2022 : மாபியா, சகோ, என்னை அறிந்தால், பாண்டவர் பூமி, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பாலும் பல ரசிகர்களைக் கவந்தவர் நடிகர் அருண்விஜய்.தற்போது இவர் நடிப்பில் உருவான ‘சினம்’, நவீனின் ‘அக்னிசிறகுகள்’,அறிவழகன் வெங்கடாச்சலத்தின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’,’பாக்ஸர்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகின்றன.

கிராமப்புறக் கதையை மையமாக வைத்து ஆக்சன் படமாக யானை உருவாகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த பாடலான “போதைய விட்டு வாலே” என்ற பாடலை பிப்ரவரி 11ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதற்குமுன் இந்த ஜோடி மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராமச்சந்திர ராஜூ,சமுத்திரக்கனி , ராதிகா, தலைவாசல் விஜய், யோகிபாபு ஆகியோர் யானை படத்தில் நடிக்கின்றனர்.

Arun Vijay next movie Yaanai update