துருவ் விக்ரம் “மகான்” படத்துக்காக பாடி அசத்திய பாடல் இணையத்தில் வைரல்!

Dhruv Vikram‘s “Missing Me” song released

Dhruv Vikram, Missing Me, Mahaan 09-Feb-2022 : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம்) வெளியாகவுள்ள திரைப்படம் மகான். வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ்ஜின் வழமையான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்திற்கு தணிக்கை குழு U /A சான்றிதழ் வழங்கியுள்ளது. மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் இந்த திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ வெளியாகவுள்ளது.

இதற்குமுன்பே மகான் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் மகான் படத்தில் இருந்து மிஸ்ஸிங் மீ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடியுள்ள மிஸ்ஸிங் மீ பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.