ஆர்.ஜே.பாலாஜியின் புதிய மினி கூப்பர்

RJ Balaji’s new car

RJ Balaji, Mini Cooper 09-Feb-2022 : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்ட நடிகர்களில் தன் வாய்ப் பேச்சு வாய்ப்பு தேடும் நடிகர் என்றால் அது ஆர்.ஜே.பாலாஜிதான். ஆர்.ஜே பாலாஜி, இந்திய வானொலி ஜாக்கி, தொகுப்பாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் நடிகர் என பல திறமையைக் கொண்டவர்.

அவருடைய குரலுக்கும் நகைச்சுவைக்கும் பல ரசிகர்கள் இருந்தாலும் நானும் ரவுடிதான், தேவி, தேவி 2, கடவுள் இருக்கான் குமார், காற்று வெளியிடை, இவன் தந்திரன், ஸ்பைடர், வேலைக்காரன், பூமராங் போன்ற படங்களில் நடித்து இன்னும் பிரபல்யம் அடைந்தார். அதன்பிறகு ஆர்.ஜே.பாலாஜிக்கு அடுத்த படங்களில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். எல்.கே.ஜில் கதாநாயகனாக அறிமுகமானவர்,மூக்குத்தி அம்மன் படம் மூலம் தன்னை கதாநாயகன் மட்டுமல்லாது இணை இயக்குனராகவும் அவதாரமெடுத்தார்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை வாங்கியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியுடன் கார் வாங்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

RJ Balaji's new Mini Cooper