“தளபதி-66” படத்துக்கு பின் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொடுக்கப்படும் விருந்து!

விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள்!

vijay, thalapathy 09-Feb-2022: விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் “பீட்ஸ்” படத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு தீர்மானித்த நிலையில் வெளியிடும் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்க படாத நிலையில் உள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது படமாக அமைந்திருக்கிறது.

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய் என்பது அறிந்ததே. அதுமட்டுமின்றி தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை எல்லா மாநிலங்களிலும் கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய “மாஸ்டர்” படத்தில் விஜய் கடைசியாக திரையில் வந்தார். இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. பல காலமாக கோவிட் லாக்டவுனுக்கு பிறகு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் திரைக்கு வந்து சக்கைப்போடு போட்டது என்பதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

கடந்த ஆண்டு சமீபத்தில் தான் விஜயின் அடுத்த படமான தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த 67 மற்றும் 68 வது படத்தின் இயக்குனர்களாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லியின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் அட்லி, விஜய், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை காணக்கூடியவாறு இருக்கிறது.