Prabhu Deva got one Crore for one song
Prabhu Deva, Nai Sekar Returns, Prabhu Deva 09-Feb-2022 : ‘தலை நகரம்’ புகழ் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இதில் நடிகர் வடிவேலு மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் வடிவேலுவுடன் ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘சூப்பர் சிங்கர்’ போட்டியாளர் சிவாங்கி கிருஷ்ணகுமார், ‘டாக்டர்’ நட்சத்திரம் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ராவ் ரமேஷ், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், லொள்ளு சபா. சேசு, பிரசாந்த் ரங்கசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

வடிவேலு சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடன புயல் பிரபுதேவா நடன அமைப்பு செய்துள்ளார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் பிரபுதேவா ஒரு கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரபுதேவாவின் காதலன், ராசய்யா, மிஸ்டர் ரோமியோ,மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா போன்ற படங்களில் வடிவேலு பிரபுதேவாவுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் இவர்கள் இருவரின் பாடல் கட்ச்களும் வரவேற்பைப் பெற்றன. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வடிவேலு, பிரபுதேவா காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.