“பீஸ்ட்” படத்தின் இயக்குனர் ரஜனியுடன் இணைகிறார்!!

ரஜனியுடன் இனைய இருக்கும் இயக்குனர் நெல்சன்!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஒரு படம் இயக்குவதற்க்காக திட்டமிட்டுள்ளார். இயக்குனர் நெல்சனுக்கு “பீட்ஸ்” படத்தை தொடர்நது ரஜனிகாந்துடன் சேர்ந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

இப் படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நல்லபடியாக முடிந்தால் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் தெருவித்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மேக்கப் லுக் டெஸ்ட் நடந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்த்தது போல் நாளை (10.02.2022) அன்று நெல்சன், சன்பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிமற்றும் சன்பிக்சர்ஸ் இணைந்து நான்காவது முறையாக காலடி பதிகின்றனர். இதற்கு முன் எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களை நடிகர் ரஜினி நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.