சூர்யாவின் “ஜெய் பீம்” 94 வது ஆஸ்கார் இறுதி பட்டியலில் இருக்கிறதா?

“ஜெய் பீம்” படத்தின் வெற்றிக்கு 94வது பட்டியலில் ஆஸ்கார் விருதா!

கடந்த வருடம் அமேசான் பிரைமில் தீபாவளி வெளியீடாக நவம்பர் மாதம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு இடங்களில் ரிலீஸ் ஆன படம் ஜெய் பீம். இந்த படத்திற்கு ஆஸ்கார் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

தமிழகத்தில் 1995இல் நடந்த சம்பவங்களைக் கொண்டு களையப்பட்டு இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக, சூர்யா நடித்திருந்தார். காவல் துறையினரிடம் பொய் வழக்கில் சிக்கி இறந்துபோகும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வாதாடும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னர் ஜெய்பீம்’ படம் தமிழக கலைஞர்களாலும், அரசியல் பிரமுகர்களாலும், பல தரப்பட்ட மக்களாலும் பாராட்டப்பட்டதுடன், வெகு சிலரால் விமர்சிக்கப்பட்டும் வந்தது. எது எப்படியோ ஒரு விவாதத்தை சமூகத்தில் உண்டு பண்ணும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தின் காட்சிகள் சில தினங்களுக்கு முன் ஆஸ்கார் விருதுக்கான காட்சிகள் “யூடியூப்” சேனலில் இடம் பெற்றன.

இந்நிலையில் 94 வது ஆஸ்கர் விருதுக்கு தகுதியான பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவிற்காக 276 படங்களில் ஒரு படமாக ஜெய்பீம் இடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரைப் பட்டியலில் இருந்து 10 படங்களே இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற முடியும். அதன்படி, அந்த 10 படங்களின் வரிசையில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெறவில்லை என்பது கவலைக்கிடமாகியுள்ளது.

இதைத்தவிர இந்த ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் ஒரே இந்திய ஆவணப்படமாக ரைட்டிங் வித் ஃபயர் (Writing With Fire) என்ற ஆவணப்படம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் தலித் பெண்களால் நடத்தப்படும் ‘கபர் லஹரியா’ பத்திரிகை வரலாற்றை பற்றி ‘Writing With Fire’ ஆவணப்படம் பேசுகிறது. “ரிந்து தாமஸ்” மற்றும் “சுஷ்மித் கோஷ்” என்ற இருவர் இணைந்து இந்த ஆவண படத்தை இயக்கியுள்ளனர்.