சந்தானம் தெறிக்கவிட இருக்கும் வெற்றிப்படத்தின் 3ஆம் பகுதி!

சந்தானம் நடிப்பில் “தில்லுக்கு துட்டு 3”

ராம் பாலா இயக்கத்தில் “தில்லுக்கு துட்டு” திரைப்படத்தின் முதல் பாகமும் சரி இரண்டாவது பாகமும் சரி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களாக அமைந்திருந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படங்கள் தலைப்புக்கு ஏற்றவாறு சக்கை போடு போட்டன.

இந்த நிலையில் தில்லுக்குதுட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வரஇருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாவது தெரியவந்துள்ளது.

இது மட்டுமின்றி, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் “மணி மஹாலில்” நடக்கவிருப்பதாகவும், இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.

அண்மையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் “சபாபதி” திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படமும் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.