“பீஸ்ட்” படத்தின் வெளியாகியுள்ள மாஸான அப்டேட்!

பீஸ்ட் படத்தின் தெறிக்கவிடும் பாடல்!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை நேற்று மாலை 6 மணி அளவில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி இப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இருக்க நேற்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.