திருவண்ணாமலையில் அருண் விஜய்

அருண் விஜய் திருவண்ணாமலை கோவில் வழிபாடு

மாபியா, சகோ, என்னை அறிந்தால், பாண்டவர் பூமி, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அருண்விஜய்.

Arun Vijay Thiruvannamalai temple

தற்போது இவர் நடிப்பில் உருவான ‘சினம்’, நவீனின் ‘அக்னிசிறகுகள்’,அறிவழகன் வெங்கடாச்சலத்தின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’,’பாக்ஸர்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

அண்ணாமலையான் திருவருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் வழமைக்கு நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.