ஐஸ்வர்யா கொரோனவிலிருந்து மீண்டார்

ஐஸ்வர்யா மீண்டும் காதல் ஆல்பம் படப்பிடிப்பில் நாளை

மூன்றாவது கொரோனா நோய்த்தொற்றால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பல சினிமா பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

Aishwarya Recover from Corona

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் பிரிந்த பின் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி காதல் ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்து வந்தார்.
இதனை காதலர் தினமான பிப்ரவரி பதினான்காம் தேதி அந்த ஆல்பத்தை வெளியிட தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். அதனை அவரது புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தினார்.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்படட்து. பின்பு 14-ந்தேதி ஆல்பம் வெளியாவது சந்தேகமானது. தற்போது அவர் பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பி உள்ளார். அவர் மீண்டும் காதல் ஆல்பம் படப்பிடிப்பில் நாளை கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இதனால் 14-ந் தேதி ஐஸ்வர்யா இயக்கும் காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளது என தற்போது தெரிவிக்கப்படுகிறது.