தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்!

பீஸ்ட் படத்தின் வெறித்தனம் தொடர்கிறது!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து அண்மையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நூறாவது நாள் நிறைவடைந்தமையும் அதன் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் கொண்டாடினர். அவ்வாறு இருக்க ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படம் எப்போது திரைக்கு வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. இன்று வெளியாகும் அப்டேட்டில், ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.