அஜித் நடிக்கும் “வலிமை” படம் தமிழை விட தெலுங்கில் அதிரடியான உருவாக்கம்!

வலிமை படம் தெலுங்கு உருவாக்கம் பற்றிய அதிரடியான தகவல் வெளியாகியுள்ளது!

தல அஜித் நடித்த வலிமை படத்தின் தமிழ் உருவாக்கம் சென்சார் முடிவடைந்து CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் 178 (2.58) மணிநேரம் காணக்கூடியவாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றும் இப்படம் 18 வயத்துக்குட்பட்டவர்களும் பார்க்கக்கூடியவாறு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோன பரவல் காரணமாக தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இருந்து 50% ஆக குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உலகமெங்கும் கொரோனாவின் புதிய உருமாற்றம் ஓமிக்ரோன் பரவலின் அதிகரிப்பால் வலிமை படத்தின் வசூல் நிலை பாதிக்கப்படலாம் என்பதன் காரணத்தினாலேயே வலிமை படம் ரிலீஸ் தேதி 13.02.2022 இருந்து 2022 பெப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வலிமை படத்தின் தெலுங்கு உருவாக்கம் சென்சார் ஆகி இருக்கிறது. தமிழ் உருவாக்கத்தை விட தெலுங்கில் 1 நிமிடம் கூடுதலாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் நீக்கிய காட்சிகள் தெலுங்கில் நீக்கப்படாமல் உருவாகியுள்ளது. இதனாலேயே தமிழை விட தெலுங்கில் வலிமை படம் வீரியமாக இருக்கும் என கூறப்படுகிறது.