இரவின் நிழல் பற்றிய செய்தி

இரவின் நிழல் படத்தில் இணைந்த ஆஸ்கர் நாயகர்கள்

Iravin Nizhal, R.Parthiban, A.R.Rahman 05/02/2022 : தாவணிக் கனவுகள் படத்தில் துணை நடிகராக நடித்த பார்த்திபன் புதிய பாதை படத்தின் மூலம் 1989ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். பின்பு உள்ளே வெளியே, பொண்டாட்டி தேவை, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம்,இவன், குடைக்குள் மழை, என பல படங்களை இவர் இயக்கியிருந்தார்.

Iravin Nizhal Update

இவருடைய ஐம்பதாவது படமான வித்தகன் படமும் இவர் இயக்கியதே. இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தார். சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்காக இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் முதன் முறையாக பார்த்திபனுடன் இணைந்துள்ளார்.

தற்போது இப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கர் நாயகர்கள் சிலர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியான ‘Whiplash’ என்ற படத்திற்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கான ஆஸ்கர் விருதை பெற்ற Craig Mann, 2016ம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழிநுபாட்டிற்கான ஆஸ்கர் விருதை பெற்ற Cottalango Leon ஆகிய இருவரும் தற்போது பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் படத்தில் இணைந்துள்ளனர். இதற்குமுன் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இப்படத்தில் ஏற்கனவே இணைந்திருந்ததால், தற்போது மூன்று ஆஸ்கர் நாயகர்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள்.