புஷ்பா இந்தியா முழுவதும் 365 கோடி வசூல்
Allu Arjun, Pushpa, Sukumar 05/02/2022 : புஷ்பா திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியானது. இது வெளியாகி ஐம்பது நாட்களிலேயே 365 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிப்பிலும் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்திலும் வெளியான புஷ்பா திரைப்படம் பாடல், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவ ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இப்பட பாடல்களும் எல்லா மொழிகளிலும் பிரபலம். ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் புஷ்பா திரைப்படம் வெளியாகி ஐம்பதே நாட்களில் இந்தியா முழுவதும் 365 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப் படங்களில் அதிகம் வசூலான திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா திரைப்படம் படைத்துள்ளது.
