அல்லு அர்ஜுன் அமரர் புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தினார்
Puneeth Rajkumar, James 04/02/2022 : கன்னட சினிமாவில் பவர் ஸ்டாராக வலம் வந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் புனித் ராஜ்குமார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு கன்னட சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலகத்தையுமே உலுக்கியது.
இவர் இறுதியாக இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற படத்தில் நடித்து வந்த போது அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகும் அவரை கௌரவிக்குமுமாக அப்படத்தின் பணிகளை முடித்து வெளியிட படக்குழு தீர்மானித்தது. அதன்படி அண்மையில் அப்படத்தின் போஸ்டரை இந்திய சுதந்திர தினத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதில் அவர் ஒரு இராணுவ வீரராக நடித்துள்ளார்.
தற்பொழுது ஜேம்ஸ் படத்தின் டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘ஜேம்ஸ்’ படத்தில் அமரர் புனித் ராஜ்குமாரின் கதாபாத்திரத்திற்கு அவரது சகோதரரான சிவராஜ்குமார் டப்பிங் செய்துள்ளார். இதை அவர் தெரிவிக்கையில், என் தம்பி படத்தில் அவருக்காக நான் டப்பிங் பேசியுள்ளது மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது” எனத் கூறியுள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை அல்லு அர்ஜுன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததோடு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.